கரூர் மாவட்டம் சிந்தலவாடி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ரங்கநாதன். விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த 1.4.2017 அன்று பூச்சி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்ற அவரை உறவினர்கள் முசிறியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து 15 நாட்கள் சிகிச்சை பெற்று 9 லட்சம் கட்டணமாக செலுத்தினர். அங்கு சிகிச்சை பெற்ற பின்பு அவருக்கு இரண்டு கண்களிலும் கண்பார்வை பறிபோனது.
இதைத் தொடர்ந்து திருச்சியில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான முறையில் இருந்து காப்பாற்றப்பட்டார். இந்த நிலையில் முறையாக சிகிச்சை அளிக்காத முசிறி தனியார் மருத்துவமனை மீது ரங்கநாதன் 15.11.2022 இல் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் முசிறி மருத்துவமனை சேவை குறைபாடு மற்றும் கவனக்குறைவு சிகிச்சை ஆகியவற்றுக்காக கண் பார்வை இழந்த ரங்கநாதனுக்கு இழப்பீடாக 30 லட்சமும் மருத்துவ சிகிச்சை செலுத்தப்பட்ட 9 லட்சமும் செலவு தொகை 10,000 சேர்த்து மொத்தமாக 39 லட்சத்தை 45 நாட்களுக்குள் வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.