பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்த பாஜகவினர்

60பார்த்தது
மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க போகும் மோடி - நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து கொண்டாடிய திருச்சி பாஜவினர்1962 நேருவுக்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது முறை வென்று பிரதமராகும் போகும் நரேந்திர மோடி வெற்றியை கொண்டாடும் விதமாகவும் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டும்
திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று (04. 6. 2024) பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது

இதில் நேற்று பிறந்த 20 குழந்தைகளுக்கு பாஜக இளைஞர் அணி மாநில செயலாளர் கௌதம் ஏற்பாட்டில் அறை கிராம் எடையுள்ள தங்க மோதிரம் அணியும் நிகழ்ச்சி நடைபெற்றதுஇதில் திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு அணிவித்து சிறப்பித்தார் மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்


இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி