திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மற்றும் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த குடிநீரின் தரத்தினை பரிசோதனையை செய்யும் அரங்கினையும் அமைச்சர் கே. என். நேரு தொடங்கி வைத்தார்
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. மா. பிரதீப் குமார் இ. ஆ. ப. , அவர்கள், மாநகராட்சி மேயர் திரு. மு. அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு. வே. சரவணன் இ. ஆ. ப. , அவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்