அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்

80பார்த்தது
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க நாளை காலை 10: 30 மணிக்கு (20 ஆம் தேதி) திருச்சி மாநகராட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

தில்லை நகர் பகுதியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேசுகையில்: -

திருச்சி மாநகராட்சி 17, 19, 20 ஆகிய வார்டுகளில் கடந்த சில நாட்களாக சாக்கடை கலந்த கழிவு நீர் குடிநீருடன் கலந்து அதனை பொதுமக்கள் குடித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு மஞ்சள்காமாலை, காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பலர் இறந்ததாக தகவல் வெளியாகி வருகிறது. இதற்குக் காரணமான விடியா திமுக அரசையும், திருச்சி மாநகராட்சியையும் கண்டித்து வருகிற 20 ஆம் தேதி திருச்சி, மரக்கடை, எம்ஜிஆர் சிலை அருகே அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொள்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதி, போக்குவரத்து மாற்றம், பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி