வீட்டிற்குள் ஏழு அடி நீளமுள்ள பாம்பு புகுந்ததால் பரபரப்பு

1118பார்த்தது
வீட்டிற்குள் ஏழு அடி நீளமுள்ள பாம்பு புகுந்ததால் பரபரப்பு
திருச்சி அருகே மாத்தூர் ஊராட்சியில் உள்ள விவேகானந்த நகர் தெற்கு பகுதியில் வசித்து வருபவர் தவசி இவரது வீட்டுக்குள் மஞ்சள் நிறம் கொண்ட சாறை பாம்பு வீட்டுக்குள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து வெளியே ஓட்டம் பிடித்தார்.


உடனே அந்தப் பகுதி வார்டு உறுப்பினருக்கு தகவல் அளித்ததின் பேரில் வார்டு உறுப்பினர் நவல்பட்டு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தார் தகவலின் பேரில் நவல்பட்டு தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன் தலைமையில் வீரர்கள் இரண்டு பேர் வீட்டிற்குள் சென்று பாம்பு பிடிக்கும் இடுக்கியை பயன்படுத்தி ஏழு அடி நீளம் உள்ள மஞ்சள் சாறை பாம்பு மீன் வலைக்குள் சிக்கி இருந்ததால் மாட்டி இருந்த மஞ்சள் சாரை பாம்பை லாவகமாக பிடித்து பாம்பை வீரர்கள் வனப்பகுதியில் விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி