திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் வாசலில் தூங்கிக் கொண்டிருந்த பக்தர் மீது கார் ஏறி இறங்கி விபத்தில் கார் சக்கரத்தில் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். புதிய காருக்கு பூஜை போட வந்த இடத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.