முசிறி - Musiri

முசிறி: நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

முசிறி: நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

முசிறி தொட்டியம் மற்றும் தாத்தையங்கார்பேட்டை பகுதிகளில் நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறை பணிகளை திருச்சி மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் செந்தில் ஆய்வு செய்தார். முசிறி நெடுஞ்சாலைதுறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலுவலகம் மூலமாக சுமார் 422 கிலோமிட்டர் நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இச்சாலைகளை முசிறி நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பு உட்கோட்டத்தை சார்ந்த சாலை ஆய்வாளர் மற்றும் சாலைப்பணியாளர்களை கொண்டு பராமரிப்பு பணிகளும், அரசு ஒப்பந்தகாரர்கள் மூலமாக டெண்டர் விடப்பட்டு சாலை அகலப்படுத்துதல், புதிதாக சாலை அமைத்தல், சிறு பாலங்கள் மற்றும் பாலங்கள் கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது 2023-2024 ஆம் ஆண்டு டெண்டர் விடப்பட்டு முடிவுற்ற பணிகளை திருச்சிவட்ட கண்காணிப்பு பொறியாளர் திரு. செந்தில் ஆய்வு செய்து பணிகளின் தரம் மற்றும் ஒப்பந்த விதிகளின்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது முசிறி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட உதவிக் கோட்டப் பொறியாளர் பிரபாகர், உதவிப் பொறியாளர்கள், சாலை ஆய்வாளர்கள், சாலைப்பணியாளர்கள் உடனிருந்தனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా