காட்டுப்புத்தூர் அருகே பாம்பு கடித்து 11 வயது சிறுவன் பலி
முசிறி அருகே உள்ள காட்டுப்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எலந்தமடை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் விகாஸ் வயது 11 ஆறாம் வகுப்பு படிந்து வருகிறார். தங்களுக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் சம்பவம் நடந்த 11-ம் தேதி அன்று விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பார்த்த விதமாக பாம்பு அவரை கடித்ததாக கூறப்படுகிறது உடனடியாக உறவினர்கள் அவரை நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் இச்சம்பவம் குறித்து காட்டுப்புத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.