திருச்சி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் திருச்சி கிளையின் சிறப்பு தொழிற் கடன் முகாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் புதிய தொழில் முனைவோர்களுக்கான கடன் உதவிகளையும் வழங்கினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக மண்டல மேலாளர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.