துறையூர் அருகே ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 57950 பறிமுதல்

77பார்த்தது
துறையூர் அருகே ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 57950 பறிமுதல்
துறையூர் அருகே ஆவணமின்றி கொண்டு சென்று ரூ. 57950 பணத்தை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் நேற்று பறிமுதல் செய்தனர்.

துறையூர் தேர்தல் பறக்கும் படை 3வது டீம் நடராஜன் தலைமையிலான அரசு அலுவலர்கள் துறையூர் அருகேயுள்ள புடலாத்தி பிரிவு ரோடு பகுதியில் வாகனத் தணிக்கை செய்தனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுக்கா அரசனத்தம் பகுதியைச் சேர்ந்த செங்கோடடமூப்பன் மகன் வரதராஜ் சென்றார். அவரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்த போது அவரிடம் முறையான கணக்கும் ஆவணமும் இன்றி ரூ. 57 ஆயிரத்து 950 இருப்பது தெரிந்தது.

இதையடுத்து பறக்கும் படை அலுவலர்கள் அவரிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்து துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலர் குணசேகரனிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி