திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பிளாத்து பகுதியைச் சேர்ந்தவர் பத்மா வயது 60. இவர் திண்டுக்கல் தனியார் கல்லூரியில் படிக்கும் பேத்தியுடன் தொட்டியம் வட்டம் காமலாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். காமலாபுரத்தில் வீட்டில் இருந்து வெளியே சென்ற பத்மாவின் பேத்தி கீர்த்தனா வயது 19 வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து பத்மா தொட்டியம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து காணாமல் போன கீர்த்தனாவை வலை வீசித் தேடி வருகின்றனர்.