முசிறி வட்டம் தா. பேட்டையில் 15 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தமிழகம் எங்கும் பரவலாக கனத்த மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது. அதன்படி பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. திருச்சி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. முசிறி வட்டத்தில் தா. பேட்டையில் 15 மில்லி மீட்டரும், முசிறியில் 8 மில்லி மீட்டரும், புலிவலத்தில் 7 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. இதனைத் திருச்சி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த வருடம் நல்ல மழை பெய்து தங்கள் வாழ்வு சிறக்கும் என எதிர்பார்க்கின்றனர்.