சிறப்பு மனுநீதி நாள் நிறைவு நாள் விழா

961பார்த்தது
முசிறி அருகே சிறப்பு மனுநீதி முகாம் நிறைவு நாள் விழா.

திருச்சி மால்ட்டம் முசிறி அருகே ஜெயங்கொண்டான் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையும் மாவட்ட ஆட்சித் தலைவரின் சிறப்பு மனுநீதி நாள் நிறைவு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முசிறி கோட்டாட்சியர் இராஜன் தலைமை வகித்தார், முசிறி வட்டாட்சியர் பாத்திமாசகாயராஜ், மண்டல வட்டாட்சியர் தங்கவேல், தனி வட்டாட்சியர் (சமூக நலத்திட்டம்) சத்யநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் செல்வம் கலந்து கொண்டு 736 பயனாளிகளுக்கு ரூ. 3 கோடியே 14 லட்சத்து 9 7 ஆயிரத்து 220 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் முசிறி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை மனோகரன் மற்றும் ஒன்றிய குழு தலைவர் மாலா ராமச்சந்திரன் முசிறி நகராட்சி தலைவர் கலைச்செல்வி சிவக்குமார் ஜெயங்கொண்டான் ஊராட்சி தலைவர் கலையரசி தர்மராசு உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். இறுதியில் பொது
மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து தனித்துணை ஆட்சியர் செல்வம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி