திருச்சி மாவட்டம் முசிறியில் பள்ளி சாரண சாரணிய மாணவர்களின் பேரணி நடைபெற்றது.
முசிறி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் உள்ள சாரன சாரணியர் இயக்கத்தில் சேர்ந்துள்ள சாரன சாரணியர் இயக்க நிறுவனர் பேட்டன் பவுல் தின விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இந்த பேரணியை மாவட்ட கல்வி அலுவலர் மதியழகன் தொடங்கி வைத்தார். சாரணர் இயக்க ஆணையர் சண்முகம், மாவட்ட செயலர் ஜெயமூர்த்தி , அமைப்பு ஆணையர் திருமலை, நாகராஜ் மற்றும் பயிற்சிய ஆணையர் சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பேரணியானது முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள சாரண சாரணியர் இயக்க அலுவலகத்தில் தொடங்கி தாபேட்டை சாலை திருச்சி சேலம் புறவழிச்சாலை வழியாக புதிய பேருந்து நிலையம் சென்று மீண்டும் அதே வழியாக அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது. இந்த பேரணியை பயிற்சி ஆணையர் ராதா அமைப்பு ஆணையர் தேவகி சாரண சாரணியர் இயக்க மாவட்ட பொருளாளர் ஷாஜகான் ஆகியோர் ஒருங்கிணைத்து வழிநடத்தினர். பேரணியில் முசிறி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.