மணல் கடத்திய நபர் கைது லாரி பறிமுதல்

64பார்த்தது
மணல் கடத்திய நபர் கைது லாரி பறிமுதல்
திருச்சி மாவட்டம் முசிறி அருகே, தொப்பளாம்பட்டி கிராமம், கல்லாங்குட்டை அருகே சட்ட விரோதமாக லாரியில் மணல் கடத்தப்படுவதாக புதுப்பட்டி கிழக்கு கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது. தகவலின் பேரில் கிராம உதவியாளருடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் (அரையூனிட்) கிராவல் மண் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதை கண்டுபிடித்தார்.
இதை அடுத்து லாரி ஓட்டுநரான மேல வடுகப்பட்டியை சேர்ந்த சாத்தவேலன் மகன் ராதா வயது 44 என்பவரை பிடித்து முசிறி காவல் நிலையத்தில் லாரியுடன் ஒப்படைத்தார். கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டுநர் ராதாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் லாரியின் உரிமையாளர் தொப்பலாம் பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் வயது 41 என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி