ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தை முசிறி குற்றவியல் நீதிமன்றத்துடன் இணைக்க கோரிக்கை

977பார்த்தது
ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தை முசிறி குற்றவியல் நீதிமன்றத்துடன் விரைந்து இணைக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை


திருச்சி மாவட்டத்தில் முசிறி குற்றவியல் நீதிமன்றத்தில் காட்டுப்புத்தூர் தொட்டியம் முசிறி காவல் நிலையங்கள் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தொட்டியத்தில் புதிய நீதிமன்றம் தொடங்கப்பட்டவுடன் , தொட்டியம் மற்றும் காட்டுப்புத்தூர் காவல் நிலையங்கள் அதனுடன் இணைக்கப்பட்டு விட்டது. இதனால் முசிறி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
இந்நிலையில் முசிறி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் தா. பேட்டை , ஜெம்புநாதபுரம் மற்றும் புலிவலம் காவல் நிலையங்களை முசிறி குற்றவியல் நீதிமன்றத்துடன் இணைக்க வேண்டும் என்று கோரிக்கையை விடுத்திருந்தனர். இதற்கு பதில் அளித்த திருச்சி நீதிமன்றம் புலிவலம் பகுதி துறையூருக்கு மிக அருகாமையில் உள்ளது. மேலும் அதன் பல பகுதிகள் துறையூர் தாலுகா உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புலிவலம் காவல் நிலையத்தை முசிறியுடன் இணைக்க இயலாது என பதிலளித்திருந்தனர். மேலும் ஜெம்புநாதபுரம் மற்றும் தா. பேட்டை காவல் நிலையங்களை முசிறி குற்றவியல் நீதிமன்றத்துடன் இணைக்க ஒப்புதல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் டிசம்பர் 1, 2022 தேதியில் வெளியிடப்பட்ட திருச்சி மாவட்ட அரசிதழில் ஜெம்புநாதபுரம் காவல் நிலையம் முசிறி குற்றவியல் நீதிமன்றத்துடன் இணைக்க ஆணை வெளியிட்டிருந்தனர். ஆணை வெளிவந்து 5 மாதங்கள் நிறைவுற்ற நிலையில் இன்னும் ஜெம்புநாதபுரம் காவல் நிலையம் முசிறி குற்றவியல் நீதிமன்றத்துடன் இணைக்கப்படவில்லை. விரைவில் ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தை முசிறி குற்றவியல் நீதிமன்றத்துடன் இணைக்க வேண்டும் என்பதே வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் தா. பேட்டை காவல் நிலையத்தையும் முசிறி குற்றவியல் நீதிமன்றத்துடன் இணைக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி