முசிறி நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு--ஆர்ப்பாட்டம்

84பார்த்தது
முசிறி அருகே உள்ள எம். புதுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களை முசிறி நகராட்சியுடன் இணைப்பதற்கு அரசு தரப்பில் கருத்துரு பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிராம மக்கள் முசிறி நகராட்சியுடன் எம். புதுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களை இணைப்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், மத்திய மாநில, அரசுகளின் திட்டங்கள் தங்களுக்கு கிடைக்காது எனவும் கூறி எம். புதுப்பட்டி ஊராட்சி அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத்
தொடர்ந்து முசிறி கோட்டாட்சியரிடம் நேரில் சென்று கோரிக்கை மனு அளிக்கவும் பொதுமக்கள் திட்டமிட்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி தாசில்தார் லோகநாதன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் எம். புதுப்பட்டி ஊராட்சி அலுவலகம் முன்பு திரண்டிருந்த
பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து கோரிக்கை மனுவை பெற்றார். பொதுமக்களின் கருத்துக்கள் அரசின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
எம். புதுபட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக சுமார் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டதால் போலீசார்
பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முசிறி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி