திருச்சி வரகனேரியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் பெயிண்டர். இவரது மனைவி அஞ்சலை மேரி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இவருக்கு பிசியோதெரபி அளிக்க ஒரு பெண் தினமும் இவரது வீட்டிற்கு வந்து சென்றார்.
இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி அவரது வீட்டுக்கு வந்த நர்ஸ் மேரியிடம் தாலி செயினை கழட்டி வைக்குமாறு கூறியுள்ளார். தொடர்ந்து அவர் செயினை கழட்டி வைத்துள்ளார். சிகிச்சை முடிந்த பிறகு மேரி செயினை பார்த்துள்ளார்.
அப்போது நகை மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து ராஜமாணிக்கம் அளித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கீழப்பாண்டமங்கலத்தைச் சேர்ந்த நர்ஸ் சார்லின் மேரியை கைது செய்தனர்.