திருச்சி விமான நிலையம் காமராஜர் நகரை சேர்ந்தவர் ஜாபர் அலி(வயது 35). இவர் புதுக்கோட்டை மெயின் ரோட்டில் பிரியாணி கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ஜாபர் அலி வயர்லெஸ் சாலையில் அந்தோனியார் ஆலயம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருச்சி விமான நிலையம் குட்டி அம்பலகாரன்பட்டியை சேர்ந்த ரவுடி கோபால் (வயது 41) என்பவர் செலவுக்கு ரூ. 1, 000 பணம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு ஜாபர் அலி மறுக்கவே, ஆத்திரமடைந்த கோபால் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி ஜாபர் அலியின் பாக்கெட்டில் இருந்து ரூ. 1, 200-ஐ பறித்து கொண்டார். மேலும் அவர் கொலை மிரட்டல் விடுத்தாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஜாபர் அலி கொடுத்த புகாரின்பேரில் விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ரவுடி கோபாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.