முசிறி: கோவில் பாதையில் நீர்த்தேக்க தொட்டி கட்ட எதிர்ப்பு

74பார்த்தது
முசிறி அருகே புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்காக வந்த ஜேசிபி வாகனத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு - கோயிலுக்கு செல்லும் பாதை உள்ளதால் மாற்று இடத்தில் குடிநீர் தொட்டி கட்ட கோரிக்கை

திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, காமலாபுரம் ஊராட்சியை சேர்ந்த மின்னத்தம்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி பழுதடைந்துள்ளதால் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணி தொடங்குவதற்காக ஜேசிபி பொக்லின் வாகனம் வந்துள்ளது. அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் இடம் அருகே கோவிலுக்கு செல்லும் பாதை உள்ளதால் மாற்று இடத்தில் குடிநீர் தொட்டி கட்ட வேண்டும் என வலியுறுத்தி ஜேசிபி வாகனத்தை மறித்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தொட்டியம் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து முற்றுகையிட்ட பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி