திருச்சி திருவெறும்பூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் காட்டூர் மஞ்சதிடல் பாலம் அருகே சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அவர் வைத்திருந்த பையில் புதுச்சேரி மது பாட்டில்கள் இருந்தன.
இதுகுறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் முத்தரசநல்லூர் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் குமார் என்பதும் காரைக்காலில் இருந்து சரக்கு வாங்கிக்கொண்டு ரயிலில் வந்ததாகவும் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு செல்வதற்காக செல்வதாகவும் தெரிவித்தார். அவரிடமிருந்து 44 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.