நம்மாழ்வார் வித்திட்ட இயற்கை வேளாண்மை உழவர்கள் பொங்கல் விழா திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள எம்ஐடி வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி மற்றும் அவரது மனைவி தமிழர்களின் பாரம்பரிய முறையான வேட்டி சட்டை, சேலை அணிந்தும் கல்லூரிக்கு வருகை தந்தார் அவருக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டு அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் என தமிழில் தெரிவித்துக் கொண்டார் அதனைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர். என். ரவி அவரது மனைவி தமிழர்களின் பாரம்பரிய முறைபடி பானையில் பொங்கல் வைத்தார். தொடர்ந்து அக்கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்தனர்.
தொடர்ந்து வள்ளி கும்மியாட்டம், தேவராட்டம், கும்மியாட்டம், குச்சியாட்டம் என பல்வேறு நடனங்களை ஆடினார்கள் இதனை ஆளுநர் ஆர். என். ரவி கண்டு ரசித்து அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
மேலும் தமிழக ஆளுநர் ஆர். என் ரவி மகா கனி செடியை நட்டு வைத்து தமிழக பாரம்பரிய ஜல்லிகட்டு காளைகளை பார்வையிட்டு, பசு மாடுகளுக்கு கீரை மற்றும் வெல்லத்தை வழங்கினார்கள். இதற்கு அடுத்தார் போல் கோ பூஜையில் கலந்து கொண்டார். பின்னர் இயற்கையில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை பார்வையிட்டார்.