திருச்சி ராம்ஜி நகர் மில்கேட் அருகே தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முத்துராமன் என்பவர் கஞ்சா பொருட்கள் விற்பனை செய்தபோது போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் இருந்து ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.