முசிறி அருகே உள்ள காட்டுப்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருங்கை கிராமத்தைச் சேர்ந்தவர் முதியவர் பூண்டி கவுண்டர் வயது 75. சம்பவம் நடந்த நேற்று (பிப்.3) தனது வீட்டிலிருந்து கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரைத் தேடியபோது அப்பகுதியில் உள்ள கிணற்றுமேட்டில் அவருடைய செருப்புகள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து உறவினர்கள் காட்டுப்புத்தூர் தீயணைப்புத்துறைக்குத் தகவல் அளித்ததன்பேரில் அந்தக் கிணற்றில் இறங்கிய தீயணைப்பு வீரர்கள் பூண்டி கவுண்டரின் உடலைச் சடலமாக மீட்டனர். சம்பவம் குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.