முசிறி அருகே உள்ள பொன்னாங்கண்ணி பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவர் தனது பேரன் 6 வயது ரித்திஸை அழைத்துக் கொண்டு நெற்குப்பை கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயற்சித்துள்ளார்.
அப்போது அப்பகுதியில் வந்த இருசக்கர வாகனம் ஒன்று சிறுவன் ரித்தீஷ் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதில் சிறுவனுக்கு இடது காலில் காயம் ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். இந்த விபத்து சம்பவம் குறித்து புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகன ஒட்டியான மன்னச்சநல்லூரைச் சேர்ந்த
பிரபு கண்ணன் என்பவர் மீது வழக்கு பதிந்து கொள்ளிடம் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.