தொட்டியம்: கொலை குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு

16011பார்த்தது
தொட்டியம் மூதாட்டி கொலை வழக்கில் கொலை கொள்ளை குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு. போலீஸ் புலன் விசாரணை தீவிரம்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஐயப்பன் நகரில் தனியாக வசித்து வந்த மூதாட்டி ராஜேஸ்வரி(65) என்பவரை மர்ம நபர்கள் கட்டிப்போட்டு கொலை செய்திருந்தனர். நேற்று மூதாட்டி உடல் அழுகிய நிலையில் சடலமாக வீட்டில் மீட்கபட்டார். வீட்டில் இருந்த 65 பவுன் நகை 10 லட்சம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தனர். இது குறித்து அவரது மகன் மணிகண்டன் என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த கொடூர கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிப்பதற்காக முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் மேற்பார்வையில்
முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தா. பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளதுஇது தவிர க்ரைம் பார்ட்டியும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

தடயவியல் நிபுணர்கள் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விட்டுச் சென்றுள்ள தடயங்களை சேகரித்துள்ளனர். அதனை வைத்தும் போலீசார் தீவிர புலன் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மூதாட்டியை கொடூரமாக கொன்று கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதற்காக போலீசார் பல்வேறு கோணங்களிலும் பல்வேறு இடங்களிலும் விசாரணையை தீவிரபடுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி