முசிறி காமராஜ் காலனியை சேர்ந்த மனோகரன் மகன் மோகன்
பிரபு (23) இவர் திருச்செங்கோட்டில் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் கல்லூரியில் பி ஏ மூன்றாம் ஆண்டு படித்து வரும் அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி மகள் சந்தியா (20) இருவரும் கடந்த ஐந்து வருடமாக காதலித்து வந்தார்கள். இந்நிலையில் பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கவே முசிறி கள்ளத்தெரு மாரியம்மன் கோவிலில் சென்று நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்த நிலையில் பெண் வீட்டாரிடம் இருந்து பாதுகாப்பு கேட்டுமுசிறி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இரு தரட்பிரையும் அழைத்து சமரசம் பேசியதில், இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து பின்னர் மாப்பிள்ளை வீட்டிற்கு மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தனர்.