குவாரி நீரில் மூழ்கி இளைஞா் பலி

68பார்த்தது
குவாரி நீரில் மூழ்கி இளைஞா் பலி
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் நடுப்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் தேக்கமலை (28). இவா் அருகேயுள்ள குவாரியில் புதன்கிழமை மதியம் குளித்தபோது நீரில் மூழ்கினாா்.

இதையடுத்து வையம்பட்டி தீயணைப்புத் துறை வீரா்கள் தேக்கமலையை சடலமாக மீட்டனா். தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்குப் பின் உறவினா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். வையம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி