2குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

3774பார்த்தது
மணப்பாறையை அடுத்த ஆண்டியகவுண்டம்பட்டியை சேர்ந்த சரவணன் (30), பொக்லைன் டிரைவர். இவருடைய மனைவி தங்கமணி (26). இவர்களுக்கு சரோனிகா (6), பிரித்விகா ஆகிய 2 மகள்களும், லட்ஜித் (1½) என்ற மகனும் இருந்தனர். இதனால் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் ஆண்டி கவுண்டம்பட்டியில் உள்ள மாமனார் வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக தங்கமணியை அவரது மாமனார்-மாமியார் நேற்று முன்தினம் திட்டியதால் மனமுடைந்த தங்கமணி தனது மூத்த மகளை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு பிரித்விகா, லட்ஜித் ஆகியோருடன் மாயமானார். இதையடுத்து பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் நேற்று அவர்களது வீட்டின் அருகில் பயன்பாடு இல்லாத ஒரு கிணற்றின் மேல் பகுதியில் தங்கமணியின் காலணி கிடந்தது. இதனால்
சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் மணப்பாறை போலீசார், தீயணைப்பு துறை தகவல் கொடுத்தனர். இதன்பேரில் மணப்பாறை போலீஸ் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் கயிறு கட்டி இறங்கி தங்கமணி மற்றும் அவரது மகன் லட்ஜித் ஆகியோரின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அதன் பிறகு பிரித்விகாவின் உடல் சுமார் 1 மணி நேர தேடுதலுக்கு பின் மீட்டனர். பின்னர் மணப்பாறை போலிசார் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார்கள்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி