தீராத வயிற்று வலி.. இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

62பார்த்தது
தீராத வயிற்று வலி.. இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
மணப்பாறை அருகே உள்ள வடக்கிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் மகன் சித்தநாதன் வயது (18). இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு அதற்கு தொடர் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் வயிற்று வலி குணமாகாததால் மன வேதனையில் இருந்தார். இதனால் சம்பவம் நடந்த நேற்று(செப்.25) வீட்டில் யாரும் இல்லாத வேளையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவருடைய தாய் தங்கமணி அளித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி