திருச்சி மாவட்டம் மணப்பாறை வானக்காரன் தெருவில் ஸ்ரீ சர்வ சித்தி யோக ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று சனிக்கிழமை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கல்யாண மஹா உற்சவம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மணப்பாறை பகுதியை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்கள்.