திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியை அடுத்த சாலையோரத்தில் கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தது. இதனால் அங்கு மலைபோல் குப்பைகள் குவியல், குவியலாக கிடந்தது.
இந்நிலையில் மர்ம ஆசாமி ஒருவர் நேற்று காலையில் அந்த குப்பைகளுக்கு தீ வைத்து சென்றார். இதனால் தீப்பற்றி எரிந்த குப்பைகள் சுமார் பத்து அடி உயரத்திற்கு கரும்புகை பரவியது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் குப்பைகள் இங்கு வந்து கொட்டியது யார்? இந்த கழிவுகளுக்கு தீ வைத்து யார்? போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.