திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பொது கழிப்பிட கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என சிபிஐ(எம்எல்) கட்சியின் தலைமையில் கோரிக்கை முன்வைத்து கடந்த (12-1-23) அன்று மணப்பாறை வட்டாட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு மனு கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து போராட்டத்தை நடத்தியது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லாததால் சிபிஐ எம்எல் கட்சியின் மணப்பாறை நகர சார்பில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என நேற்று மாலை செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.