திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சமுத்திரத்தை சேர்ந்த ராஜ்குமார். இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது காரை சமுத்திரத்தில் உள்ள ஒரு டீக்கடை முன்பு நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது இவரது காரில் இருந்து மணப்பாறையை சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் முகமது இர்ஃபான் ஆகிய இருவரும் திருட முயன்றனர். அப்போது ராஜ்குமார் இருவரையும் கையும் களவுமாக பிடித்து மணப்பாறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார்கள்.