கும்பாபிஷேகத்தை யொட்டி யாகசாலை பூஜை தொடக்கம்

64பார்த்தது
கும்பாபிஷேகத்தை யொட்டி யாகசாலை பூஜை தொடக்கம்
மணப்பாறையை அடுத்த கண்ணுடையான் பட்டி மாமுண்டி நல்லாண்டவர் கோயில் கும்பாபிஷேக விழா வருகின்ற ஜீன் 9ந்தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி நேற்று இரவு முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதற்காக கோயிலில் இருந்து சிவாச்சாரியார்களால் கடங்கள் யாக சாலைக்கு கொண்டுவரப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. சனிக்கிழமை இரண்டு மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை நான் காம் கால பூஜைகள் நடைபெறுகிறது. பிறகு கோபுர விமானம் மற்றும் மூலவர், பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. ஏற்பாடு களை கோயில் செயல் அலுவலர் ந. அன்பழகன் மற்றும் அறங்காவலர் கே. ஆர். கே. முத்துவீரலெக் கைய நாயக்கர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி