மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய பெண் போலீஸ் விசாரணை

69பார்த்தது
மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய பெண் போலீஸ் விசாரணை
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தானத்தம் அருகே நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த சின்னதங்கம் (35). இவரது கணவர் மோகன் மூர்த்தி கடந்த 5ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் அவர் தனது 7 வயது மகள் மற்றும் மாமியாருடன் வசித்து வந்தார். நேற்று சின்னத்தங்கம் வீட்டு அருகே உள்ள மாட்டு கொட்டகையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இந்தநிலையில் அவரது சாவில் மாமம் இருப்பதாக உறவினர் புத்தாநத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி