மணப்பாறை அருகே குவாரி குட்டையில் தாய் மகள் சடலம்

78பார்த்தது
மணப்பாறை அருகே குவாரி குட்டையில் தாய் மகள் சடலம்
திருச்சி மாவட்டம் மருங்காபுரி அருகே உள்ள யாகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் உலகநாயகி இவர் தன்னுடைய மகள் ஜெயஸ்ரீ உடன் நேற்று 01.06.2023ம் தேதி மாலை யாகாபுரம் கிராமம் சமத்துவபுரம் அருகில் குறத்தி மலை அய்யனார் கோவில் அருகில் உள்ள செயல்பாட்டில் இல்லாத குவாரிக்கு துணி துவைத்து விட்டு குளிக்க சென்றுள்ளார். 

இந்நிலையில் இன்று 02.06.2023ம் தேதி காலை சுமார் 09.00 மணிக்கு மேல் அம்மா மற்றும் மகள் ஆகிய இருவரும் இறந்து மிதந்து கிடப்பதாக துவரங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடம் சென்ற துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் விஜய் கோல்டன் சிங் அவர்கள் நேரில் விசாரணை செய்து வருகின்றார். இறந்த நபர்களின் பிரேதமானது மணப்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி