மணப்பாறை: கோயில் உண்டியலில் பணம் திருட்டு

85பார்த்தது
மணப்பாறை: கோயில் உண்டியலில் பணம் திருட்டு
மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரியில் பகவதி அம்மன் கோயில் உள்ளது. கோயில் பூசாரியாக மூக்காண்டி பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்து கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார். 

நேற்று காலை வந்து பார்த்தபோது கோவிலின் இரும்பு கேட்டில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பக்தர்கள் காணிக்கை பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது. 

உண்டியலில் பக்தர்களின் காணிக்கை ரூபாய் 10 ஆயிரம் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. பின்னர் கோவில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி