மணப்பாறை: ஒரே நாளில் 20 பேரை கடித்துக் குதறிய வெறி நாய்கள்

65பார்த்தது
மணப்பாறை: ஒரே நாளில் 20 பேரை கடித்துக் குதறிய வெறி நாய்கள்
மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றிக்கொண்டு திரிகின்றன. மக்கள் கூடும் இடங்கள் சாலைகளிலும் அதிக அளவில் நாய்கள் சுற்றி வரும் நிலையில் நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடம் தொடர்ந்து எழுந்து வந்தது. அதைப்பற்றி அதிகாரிகள் யாரும் கவனத்தில் கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இந்நிலையில் நேற்று இரவு மணப்பாறை மஸ்தான் தெருவில் வாகனத்தில் சென்றவர்கள் நடந்து சென்றவர்களை நாய்கள் விரட்டிக் கடித்து 15க்கும் மேற்பட்ட நபர்கள் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 

இதன் காரணமாக அந்த சாலையில் பொதுமக்கள் அச்சத்துடன் பயணித்தனர். நேற்று மட்டும் பேருந்து நிலையம், ராஜீவ்நகர், மஸ்தான் தெரு, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் 20 பேரை நாய்கள் கடித்து சிகிச்சை பெற்றதாக மணப்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்தி