மணப்பாறை அருகே உள்ள பாத்திமா புதூர் பகுதியைச் சேர்ந்தவர் லூயிஸ் ஆரோக்கியதாஸ் இவருக்கு சுகன்யா என்பவருடன் சுமார் 12 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி, திருமணமான இரண்டு வருடங்களிலேயே தனது மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 10 வருடங்களாக மனைவியை பிரிந்து தனியாக தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
தனது தந்தையுடன் தங்கி ரோட்டுக்கு தார் போடும் வேலை செய்து வந்தார். நிலையில் நேற்று 06.06.25 மதியம் சுமார் 14:00 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாமல் தனியாக இருந்த போது தனது வீட்டு சமையல் அறையில் ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கம்பியில் தனது வெள்ளை வேட்டியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் அவரது உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.