திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கருமலை பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேஷ். இவா் அதே பகுதியில் பயிரிட்டிருந்த கரும்புப் பயிா்கள் கோடை வெப்பத்தால் புதன்கிழமை திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கின. அக்கம்பக்கத்தினா் போராடியும் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லையாம்.
தகவலறிந்து சென்ற துவரங்குறிச்சி தீயணைப்புத் துறை வீரா்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா். புத்தாநத்தம் போலீஸாா், வருவாய்த்துறையினா் விசாரிக்கின்றனா்.