மணப்பாறை: தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

1257பார்த்தது
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆர் எஸ் வையம்பட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் வையம்பட்டி போலிசாருக்கு கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது
ஆர் எஸ் வையம்பட்டி அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளி அருகே வையம்பட்டி அடுத்த நடுப்பட்டியை சேர்ந்த சரவணகுமார் (45) என்பவர் புகையிலை பொருட்கள் விற்ற போது கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தி வழக்கு பதிந்து கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி