மணப்பாறை: பெல் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக மோஷடி

83பார்த்தது
மணப்பாறை: பெல் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக மோஷடி
மணப்பாறையை அடுத்த பொய்கை திருநகரை சேர்ந்த சந்தியா, பொத்தமேட்டுப்பட்டியை மார்கரெட் வனிதா மற்றும் தெற்குஅஞ்சல்காரன்பட்டி அல்போன்ஸ் மேரி ஆகியோர் நேற்று காலை மணப்பாறை காவல் நிலையத்துக்கு சென்று அளித்த புகாரில் மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியை சேர்ந்த கபிரியேல் மனைவி லார்ன்ஸ் சோபியா தான் திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், உங்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாங்கி தருகிறேன் என கூறி தலா சுமார் மூன்றரை லட்சம் என வசூலித்து ஏமாற்றியதாகவும், பணத்தை திரும்ப கேட்க சென்ற போது மிரட்டுவதாகவும், தங்களது பணம் திரும்ப கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர். இந்த புகார் குறித்து காவல் ஆய்வாளர் குணசேகரன், உதவி காவல் ஆய்வாளர் வாசுதேவன் தலைமையிலான போலீஸார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி