நல்லாண்டவர் கோவிலில் கும்பாபிஷேக விழா

63பார்த்தது
நல்லாண்டவர் கோவிலில் கும்பாபிஷேக விழா
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள அருள்மிகு ஶ்ரீ நல்லாண்டவர்
கோவிலில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து கடந்த ஒரு ஆண்டாக திருப்பணிகள் நடந்து வருகின்றன.  இந்நிலையில் திருப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால் வருகின்ற ஜீன் 9ந்தேதி மகா கும்பாபிஷேகம் செய்ய உள்ளனர்.  இந்த கும்பாபிஷேக விழா விக்னேஸ்வரர் பூஜையுடன் துவங்க உள்ளது.
போக்குவரத்து நெரிசல் ஏற்படாமலும், பக்தர்கள் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும், கோவில் அறங்காவலர்கள், பூசாரிகள் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி