மணப்பாறை முத்தன் தெருவில் உள்ள ஏகேஎஸ் திருமண மஹாலில் நேற்று மாலை மனித நேய மக்கள் கட்சியின் (எம்எம்கே) செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது திருச்சி மாவட்ட தலைவர் ஏ. பைஸ் அகமது தலைமையில் நடைபெற்றது. இதில் தமுமுக மாநில செயலாளா் சிவகாசி
எம். முஸ்தபா, எம்எம்கே மாநில அமைப்பு செயலாளா்
எம். காதா்மைதீன், இப்பகுதியை சேர்ந்த ஏராளமான எம்எம்கே நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.