மணப்பாறை அடுத்த கஸ்தூரி பட்டியில் அமைந்திருக்கும் அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கடந்த மாதம் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மண்டல பூஜை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இன்று 48-ஆம் நாள் மண்டல பூஜை நிறைவு நாளை முன்னிட்டு இன்று இரவு 7: 30 மணி அளவில் சக்தி விநாயகர் சுப்ரமணியசாமி தேவசேனா, ஆஞ்சநேயர், நவகிரகங்கள் தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 8 மணி அளவில் மதுரை கிராமிய பண்பாட்டு கலை குழுவினர் வழங்கும் கலை நிகழ்ச்சியானது விமர்சையாக நடைபெற உள்ளது. ஆகவே ஊர் பொதுமக்களும், சுற்றுவட்டார பொதுமக்களும்,
பக்த கோடிகளும், மெய் அன்பர்களும் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து தருமாறு விழாக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.