மணப்பாறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

51பார்த்தது
மணப்பாறையில் CPI(ML)கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3குற்றவியல் சட்டங்களையும் வாபஸ் பெறவும்
கள்ளகுறிச்சியில் விஷசாரயத்தால் இறந்தவர்களுக்கு தமிழக அரசே முழு பொருப்பு ஏற்று கலால் துறை அமைச்சர் பதவி விலகவும்,
மணப்பாறையில் தொடர் கொள்ளை , கொலை, திருட்டு கஞ்சாபோதை உள்ளிட்ட சம்பவங்களை கட்டுபடுத்தி காவலர்களின் எண்ணிக்கையை உயர்த்தி
ரோந்து பணியை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவும் மற்றும் பகுஜன் சமாஜ்வாடி கட்சி தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை பெற்று தரவும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மணப்பாறை பேருந்து நிலையம் எதிரே நகர செயலாளர் P. பாலு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னிலை மாவட்டகுழு உறுப்பினர்கள்
கே. மாசிலாமணி,
கே. கருப்பையா , ஆவா. இளையராஜா, எம். தங்கராஜ்,
ஆர், ராமாயி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
கண்டன உரை மாநிலகுழு உறுப்பினர் வழக்கறிஞர்
S. ராஜ்குமார்
கண்டன உரையாற்றினார். இறுதியாக நன்றிவுரையை மாவட்டகுழு உறுப்பினர் மெக்கானிக் எஸ். இளையராஜா கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி