திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பாலப்பட்டி அருகே தனியார் பால் நிறுவனத்தில் குளிரூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் அமோனியம் குளோரைடு வாயு நிரப்பப்பட்ட சிலிண்டர் வெடித்து அப்பகுதி முழுவதும் பரவியதால், பொதுமக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் சுவாச கோளாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.