முன்விரோதம் காரணமாக ஒருவருக்கு அரிவாள் வெட்டு

53பார்த்தது
முன்விரோதம் காரணமாக ஒருவருக்கு அரிவாள் வெட்டு
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரி அருகே அய்யனார் கோவில்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் கிருஷ்ணன் என்பவருக்கும் நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று டூவீலரில் ஆறுமுகம் அப்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கிருஷ்ணன் அவரை வழிமறித்து கத்தியால் தாக்கியுள்ளார். இதில் கிருஷ்ணன் காயம் அடைந்து துவரங்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அறிந்த துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி