திருச்சி மாவட்டம், மணப்பாறை மதுரை சாலையில் கற்பகம் தியேட்டர் அருகே பிரிவு சாலை உள்ளது. இதன் வழியாக தான் மணப்பாறை - மதுரை வாகனங்கள் செல்கிறது. இந்த சாலை வாகனங்கள் அதிகம் செல்வதால் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. இதனால் இந்த சாலையில் நெடுஞ்சாலைதுறை சார்பில் வேகத்தடை அமைத்திட வேண்டுமென சி. பி. ஐ(எம். எல்) கட்சியினர் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.